பந்தி இடு பசியாற்று- நாடு தழுவிய நிலையிலான உணவு உதவித் திட்டம்

நம் சமூகத்தின் உண்மையான பசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், அனைவருக்கும் நன்கு உணவளிக்கப்படுவதை உறுதி செய்வதற்குமான ஒரு தொடக்க முயற்சி. அனைவரும் கைகோர்த்து, நமது கூட்டு வலிமையையும், அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கும் திறனையும் வெளிப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்.

இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கவும் எங்களுடன் ஒத்துழைக்கவும் பல கோயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புனித இடங்கள் நமது உணவு உதவி முயற்சிகளுக்கான மையங்களாகச் செயல்படும். அவற்றின் வளங்கள் மற்றும் சமூக இணைப்புகளைப் பயன்படுத்தி நமது இந்தத் திட்டம் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யும்.

எங்களின் இந்த முயற்சியில் அனைவரும் கை கோர்க்கலாம். உங்கள் நேரத்தையும் முயற்சியையும் தன்னார்வமாக வழங்குவதன் மூலமாகவோ அல்லது பங்கேற்கும் கோயில்களுக்கு நேரடியாக நன்கொடைகள் வழங்குவதன் மூலமாகவோ உங்கள் ஆதரவை வழங்க முடியும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஈடுபடுவதன் மூலம், பசியைப் போக்கி, நாடு முழுவதும் நல்வாழ்வை மேம்படுத்தும் திறன் கொண்ட ஒரு வலுவான வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.