நிறுவனர்/தலைவர்

திரு.சண்முகம் மூக்கன்

மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி

திரு. சண்முகம் ஒரு சாதாரண தனியார் கூட்டாண்மை நிறுவன  ஊழியராக இருந்து இன்று மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரியாக தனது அசாதாரண பயணத்தைக் கடந்து வந்திருக்கிறார். அரசியல் அரங்கில் 16 வருட வளமான அனுபவத்துடன், திரு சண்முகம் தனது இன்றைய பணிக்கான அறிவையும் அனுபவத்தையும் ஒருங்கே அமையப்பெற்றவராகத் திகழ்கிறார்.

ஆழமான, வேரூன்றிய நம்பிக்கைகள் கொண்ட ஒரு தொலைநோக்குடைய தலைவர்

திரு. சண்முகம் நம் சமுதாயத்தை தன்னிறைவான, சுய மேம்பாட்டை அடையக்கூட்டிய நிலையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையால் உந்தப்பட்டவர் ஆவார். அடிப்படையில் தலைமைத்துவம் நிறைந்த, சுய மேம்பாட்டை அடையக்கூடிய நிலையில் நம் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதோடு சுதந்திரம் மற்றும் மீட்டெழுச்சியைப் போற்றுபவர்களாகவும் உருவாக வேண்டும் என்று கருதுபவராவார். ஒன்றுமே இல்லா நிலையில் தொடங்கி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கிய நமது முன்னோர்களின் கடின உழைப்புணர்வு அவரது அணுகுமுறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

கலாச்சார பாரம்பரியம் மற்றும் மேம்பட்டில் கடப்பாடு

கலாச்சாரத்தையும் அறிவையும் உயர்வாகக் கருதும் திரு.சண்முகம், நவீன வளர்ச்சியில் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். நமது கலாச்சார வேர்களைப் புரிந்துகொள்வதும் பாதுகாப்பதும் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு அவசியம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது முயற்சிகள் பாரம்பரிய விழுமியங்களைச் சமகால வளர்ச்சியுடன் கலப்பதை நோக்கி இயக்கப்படுகின்றன, கலாச்சாரம் புறந்தள்ளப்பட்டு ஏற்படும் முன்னேற்றம் முறையான  முன்னேற்றமாகாது என்பது அவரது கொள்கையாகும்..

சுய மேம்பாட்டை முன்னிலைப்படுத்தும் சமூகத்தை உருவாக்க வழிகாட்டுதல்

திரு. சண்முகம் தனது தற்போதைய பொறுப்பில், நமது சமூகத்தை தன்னம்பிக்கை கொண்டதாகவும், அதன் தலைவர்களைச் சுயமாகவே உருவாக்கும் திறன் கொண்டதாகவும் மாற்றுவதில் உறுதியாக உள்ளார். உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, மக்கள் சுதந்திரமாக வளரக்கூடிய சூழலை உருவாக்குவதும் தான் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அவரது மூலோபாய முயற்சிகள் தலைமைத்துவ மற்றும் உள்ளூர் திறன்களை மேம்படுத்துவது மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.

முடிவுரை

திரு. சண்முகம் சாதாரண தனியார் கூட்டாண்மை நிறுவன  ஊழியராக தொடங்கியதிலிருந்து பிரதமர் அலுவலகத்தில் பொறுப்புமிக்க பணியை வகிக்கும் வரை அவரது பயணம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்துக்கு ஒரு சான்றாகும். சமூக வளர்ச்சி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் சுய நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அனைவருக்கும் பிரகாசமான, தன்னம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை அவர் தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துகிறார்.

திரு. சண்முகம் அவர்களின் நேரடி இயக்கத்தைப் பின்தொடர

சமூக ஊடகங்களில் பின்தொடரவும்

Conclusion

r. Shanmugam’s journey from corporate beginnings to his influential role in the Prime Minister’s office is a testament to his dedication and visionary leadership. With a focus on community development, cultural preservation, and self-sustainability, he continues to inspire and lead efforts that aim to create a brighter, self-reliant future for all.